பெர்லின்: ஜெர்மனியில் ஈராண்டுகளுக்கு முன்னர் இரு நோயாளிகளை சக்திவாய்ந்த மருந்து கொடுத்து கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டணை விதிக்கப்பட்ட ஆண் தாதி மேலும் 84 கொலைகளில் சம்பந்தப் பட்டிருப்பதாக சந்தேகிக்கப் படுவதாக போலிஸ் தகவல் தெரிவித்துள்ளது. நெய்ல்ஸ் ஹோகல், 40, என்பவருக்கு 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்மன்ஹோர்ஸ்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளைக் கொலை செய்ததால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளி தொடர்பான மேலும் 84 கொலைகளின் தடயங் களான மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரி விக்கப்பட்டது. ஜெர்மனியின் மிக மோசமான தொடர்கொலை குற்றவாளியாக இவர் கருதப்படுகிறார்.
ஜெர்மனி: 84 கொலைகளில் சம்பந்தப்பட்ட ஆண் தாதி
1 mins read

