ஹியூஸ்டனில் உடனடி வெள்ள நிவாரணம்

ஹியூஸ்டனில் உடனடி வெள்ள நிவாரணம்

1 mins read
b6641a38-00ce-4ded-b427-dde7176a00b8
-

ஹியூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஹியூஸ்டன் மாநகரம் வெள்ளத் தில் மூழ்கி இருப்பதாகவும் இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் அதிகாரிகள் கூறியுள் ளனர். டெக்சஸ் மாநிலத்தை ஹார்வி புயல் புரட்டிப்போட்ட நிலையில் கடந்த சில நாட்களாகவே அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் வெள்ளப்பெருக்கு மேலும் மோச மடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஹியூஸ்டனில் ஏற்கெனவே 30 அங்குல மழை பதிவாகி உள்ளது. இந்த வார இறுதியில் பெய்யும் மொத்த மழை அளவு இரட்டிப்பாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன் னுரைத்துள்ளது. பேரழிவை ஏற்படுத்தி வரும் மோசமான வெள்ளப்பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உறுதி அளித்தார்.