பேங்காக்: நீதிமன்ற தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்ன தாக நாட்டைவிட்டு தப்பிச் சென்ற தாய்லாந்து முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் உடனடித் திட்டம் எதுவும் இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரி வித்துள்ளார். அரிசி மானியத் திட்டம் தொடர்பில் குற்றம் சாட்டப் பட்டிருந்த யிங்லக் மீதான வழக்கின் தீர்ப்பு சென்ற வாரம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப் படவிருந்த நேரத்தில் அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவர் நாட்டைவிட்டு வெளியேறி துபாய்க்கு சென்றுவிட்டதாக அவரது கட்சி தெரிவித்துள்ளது. உரிய நேரத்தில் அவர் மக்களுக்காக உரையாற்றுவார் என்று அவரின் புவா தாய் கட்சி தெரிவித்துள்ளது.
யிங்லக்கின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படமாட்டாது
1 mins read
-

