மியன்மாரிலிருந்து தப்பியோடும் ரோஹிங்யா மக்கள்

மியன்மாரிலிருந்து தப்பியோடும் ரோஹிங்யா மக்கள்

1 mins read

யங்கூன்: மியன்மாரின் வட மேற்கு மாநிலத்தில் நடக்கும் சண்டைக்குப் பயந்து ரோஹிங்யா முஸ்லிம்கள் சுமார் 9,000 பேர் தப்பிச்சென்று எல்லையில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ராக்கைன் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மீது ரோஹிங்யா கிளர்ச்சியாளர்கள் ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ராணுவம் தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதனால் உயிருக்குப் பயந்து பலர் அங்கிருந்து ஓடுகின்றனர். பாதுகாப்பு கருதி பெளத்த சமயத்தைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானவர்களை அரசாங்கம் வெளியேற்றி வருகிறது. இந்நிலையில் மக்களைப் பாதுகாக்குமாறு மியன்மார் அரசாங்கத்தை ஐநா கேட்டுக் கொண்டுள்ளது. ராணுவ ஒடுக்குமுறைக்குப் பயந்து ராக்கைன் மாநிலத்திலிருந்து தப்பிச்செல்லும் மக்களுக்கு பங்ளாதேஷ் அடைக்கலம் கொடுத்து உதவ வேண்டும் என்றும் ஐநா வலியுறுத்தியுள்ளது. அந்த மாநிலத்தில் பல வீடு கள் தீ வைத்து கொளுத் தப்படுவதாகவும் இதனால் வீடுகளிலிருந்து மக்கள் தப்பி ஓடுவதாகவும் அப்பகுதி குடியிருப்பாளர் ஒருவர் தொலை பேசியில் கூறியதாக ராய்ட்டர்ஸ் தகவல் தெரிவித்தது. கடந்த சில நாட்களில் மட்டும் பாதுகாப்புப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடை யில் நடந்த சண்டையில் குறைந்தது 109 பேர் கொல்லப் பட்டனர். மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு வருகிறது.