வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தை கடும் புயல் புரட்டிப்போட்ட நிலையில் அங்குள்ள ஹியூஸ்டன் நகரம் மோசமான வெள்ளப்பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த சில நாட் களாக பெய்த கனமழை காரண மாக அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதி களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ள நிலையில் அங்கு வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து திருடிச் செல்வதும் சூறையாடல் சம்பவங்களும் அதிகரித் துள்ளன. அதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் அந்நகரில் இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சூறையாடல் சம்பவங் களைத் தடுப்பதற்காக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு ள்ளது என்று ஹியூஸ்டன் மேயர் சில்வஸ்டர் டர்னர் தெரிவித் துள்ளார். ஊரடங்கு உத்தரவு எத்தனை நாட்கள் நடப்பில் இருக்கும் என்பது தெரியவில்லை.
ஹியூஸ்டன் நகரில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதியிலிருந்து வெளியேறும் மக்களுக்கு தொண்டூழியர்களும் மீட்புக் குழுவினரும் உதவுகின்றனர். படம்: ஏஎஃப்பி

