இலங்கையின் முன்னாள் ராணு வத் தளபதியும் தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான இலங்கைத் தூதருமான ஜகத் ஜெயசூர்யாவுக்கு எதிராக மனித உரிமை குழுக்கள் பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளில் வழக்குத் தொடுத்துள்ளன. இலங்கையில் 2009ல் விடுத லைப் புலிகளுடன் நடந்த கடைசி க் கட்டப் போரின்போது ஜகத் ஜெயசூர்யா இலங்கை ராணுவத் திற்குத் தளபதியாக செயல் பட் டார். அப்போது பல்லாயிரக் கணக்கான இலங்கைத் தமிழர் களும் போராளிக் குழுவின் தலைவர்களும் கொல்லப்பட்டனர். போரின்போது நடந்த மனித உரிமை மீறல் செயல்களுக்காக விடுதலைப் புலிகள் குழுவின் தலைவர்கள், இலங்கை அரசாங் கம் ஆகிய இரு தரப்பினர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. ஜெயசூர்யாவின் தலைமையி லான படைகள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதோடு, ஆயிரக்கணக்கான குடிமக் களைக் கடத்திச் சென்று கொடு மைப்படுத்திக் கொன்றதாகவும் குற்றச்சாட்டு கூறுகிறது. போரின் கடைசி மாதங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை. ஏராளமானோர் கொல்லப்பட்ட தற்குக் காரணமாக அமைந்த ஷெல் குண்டு தாக்குதல்களைக் கண்மூடித்தனமாக நடத்தியதாக இலங்கை அரசு படைகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதேவேளையில், போரின் போது மக்களை மனிதக் கேடயங் களாகப் பயன்படுத்தியதாகவும் தப்பிச்செல்ல முயன்றவர்களைச் சுட்டதாகவும் விடுதலைப் புலிகள் அமைப்பு மீது குற்றம் சாட்டப் பட்டது.
இலங்கை போர்க்குற்றம்: முன்னாள் ராணுவத் தளபதி மீது வழக்கு
1 mins read
-

