கோலாலம்பூர்: மலேசியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு கள் நிறைவடைவதை முன் னிட்டு நேற்று மெர்டேக்கா சதுக் கத்தில் சுதந்திர தின அணி வகுப்பு கோலாகலமாக நடந்தது. காலை 8 மணிக்குத் தொடங்கிய அணிவகுப்பைக் காண ஆயிரக் கணக்கான மலேசியர்களும் சுற்றுப் பயணிகளும் அங்கு குழுமியிருந்தனர். மலேசிய மாமன்னர் முன்னிலையில் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பங்கேற்க, நாட்டின் முக்கிய துறைகள் மற்றும் அடையாள அணிவகுப்புகள் மிக சிறப்பாக நடைபெற்றன. இதனைக் காண, காலை 6 மணி முதலே மக்கள் மெர்டேக்கா சதுக்கத்தில் திரளத் தொடங்கினர். பலர் தங்கள் கைகளில் தேசியக் கொடியை ஏந்திக்கொண்டும் தலையில் மெர்டேக்கா வாசகங்கள் அடங் கிய மஞ்சள் வண்ண துணியை அணிந்து கொண்டும் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தினர். தேசிய தின அணிவகுப்பு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டாலும் நேரில் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று மக்கள் கூறினர்.
மலேசியாவில் சுதந்திர தின கொண்டாட்டம்
1 mins read

