டாக்கா: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் அண்மைய காலமாக வன்செயல்கள் அதிகரித்திருப் பதால் அங்கிருந்து படகு மூலம் ரோஹிங்யா முஸ்லிம்கள் ஏராளமானோர் தப்பிச்செல்லும் வேளையில் 20 பேரின் சடலங்களை பங்ளாதேஷ் கடலோர காவல் படையினர் மீட்டுள்ளதாக டாக்கா தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் வந்த படகு மூழ்கியதால் அவர்கள் உயிரிழந்ததாகவும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் சிறார்களும் பெண்களும் ஆவர் என்றும் கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் கூறினார். ரோஹிங்யா கிளர்ச்சியாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை 30 போலிஸ் நிலையங்களைத் தாக்கி யதைத் தொடர்ந்து அவர்களை ஒடுக்க ராணுவம் கடும் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் சண்டைக்குப் பயந்து அங்கிருந்து பலர் தப்பிச்செல்கின்றனர். இதுவரை 18,000 ரோஹிங்யா மக்கள் அங்கிருந்து தப்பிச் சென் றுள்னர். அவர்களில் ஏராளமா னோர் பங்ளாதேஷிற்குள் நுழைந் திருப்பதால் மேலும் பலரை அனுமதிக்க அந்நாடு மறுத்து வருகிறது. இதனால் எல்லை முகாம்களில் பலர் தங்கியுள்ளனர்.
மியன்மாரிலிருந்து தப்பிவந்த ரோஹிங்யா அகதிகள் பங்ளாதேஷில் உள்ள தற்காலிக முகாமிற்குள் நுழைய காத்திருக்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

