தோக்கியோ: வடகொரியாவின் ஏவுகணைச் சோதனையைத் தொடர்ந்து பிரிட்டனும் ஜப்பானும் பாதுகாப்பு தொடர்புகளை வலுப்பபடுத்த இணங்கியுள்ளன. ஜப்பான் சென்றுள்ள பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே ஜப்பானிய தற்காப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடிரோவுடன் தேசிய பாதுகாப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டார். தோக்கியோ அருகே உள்ள கடற்படை தளத்தில் ராணுவ மரியாதை அணிவகுப்பை பார்வையிட்ட பின்னர் உரையாற்றிய திருவாட்டி மே, "எனது இந்த வருகை இரு நாடுகளுக்கும் இடையில் தற்காப்பு ஒத்துழைப்பு அதிகரித்து வருவதற்கான அறிகுறி," என்று குறிப்பிட்டார். ஜப்பானில் ராணுவப் பயற்சியில் பிரிட்டிஷ் வீரர்கள் பங்கெடுப்பதற்கான திட்டம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைக்க பிரிட்டிஷ் பிரதமரும் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயும் இணங்கியுள்ளனர்.
பாதுகாப்பு தொடர்புகளை வலுப்படுத்த பிரிட்டன்- ஜப்பான் இணக்கம்
1 mins read

