மணிலா: பிலிப்பீன்சில் போதைப் புழங்கிகளையும் போதைப் பொருள் கடத்துவோரையும் காவல்துறையினர் விசாரணையின்றி சுட்டுக் கொல்லப்படும் சர்ச்சைக்குரிய சம்பவங்களுக்கு இடையே பொய்ச் செய்திகளை வெளியிடு வோருக்கு எதிராக சிறைத் தண்டனையையும் அபராதத்தையும் விதிக்கும் புதிய சட்டத்தில் அதிபர் டுட்டர்டே கையெழுத்திட்டுள்ளார். புதிய சட்டத்தின் கீழ் பொது ஒழுங்குக்கு பங்கம் விளைவிக்கும் பொது நலன்களைப் பாதிக்கும் வகையில் பொய்ச் செய்திகளை யாராவது வெளியிட்டால் ஒரு மாதம் முதல் ஆறு மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்கப் படும் அல்லது 40,000 பிசோ (S$1,061) முதல் 200,000 (S$4,305) பிசோ வரை அபராதம் விதிக்கப்படும்.
டுட்டர்டே: பொய்ச் செய்திகளை வெளியிட்டால் சிறை, அபராதம்
1 mins read
-

