ஹார்வி புயல்: 44 பேர் பலி; மில்லியனுக்கு மேற்பட்டோர் வீட்டைவிட்டு வெளியேற்றம்

ஹார்வி புயல்: 44 பேர் பலி; மில்லியனுக்கு மேற்பட்டோர் வீட்டைவிட்டு வெளியேற்றம்

1 mins read
174be29c-e127-4fc8-ab55-9bcda172ccca
-

அமெரிக்காவின் டெக்சஸ் மாநி லத்தை ஹார்வி புயல் தாக்கி ஒரு வாரம் ஆன நிலையிலும் இன்னும் பல பகுதிகள் நீரில் மிதப்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றன. ஹியூஸ்டன் நகருக்குக் கடும் சேதம் விளைவித்த ஹார்வி புயல் காரணமாக 44 பேர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படு கிறது. மில்லியனுக்கு மேற்பட் டோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான பகுதி களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். டெக்சஸ் மாநிலவாசிகள் சுமார் 779,000 பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இந்நிலை யில், ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதாலும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும் புதிதாக வெள்ளம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் மேலும் 980,000 பேர் தாங்களாகவே தங்கள் வீடு களைவிட்டு வெளியேறினர். ஹியூஸ்டனில் இருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அர்கேமா ரசாயன ஆலையில் நேற்று முன்தினம் வெடிப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில், வெள்ள நீர் சூழ்ந்துள்ள அந்த ஆலையில் மேலும் வெடிப்புகள் ஏற்படலாம் எனப் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஹியூஸ்டனில் உள்ள பார்க்லே நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மீட்புப் படையினர் அப்பகுதியில் இருப்போரை கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். படம்: ஏஎஃப்பி