40,000 ரோஹிங்யா அகதிகள் தப்பியோட்டம்

40,000 ரோஹிங்யா அகதிகள் தப்பியோட்டம்

1 mins read

டாக்கா: மியன்மாரிலிருந்து அண்டை நாடான பங்ளாதேஷ் நாட்டுக்கு 40,000 ரோஹிங்யா அகதிகள் தப்பியோடியுள்ளனர் என்று ஐநா மதிப்பிட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு ராக்கைனில் போலிஸ் சாவடி களை ரோஹிங்யா போராளிகள் தாக்கியதைத் தொடர்ந்து வன் முறை வெடித்தது. அப்போது முதல் ஏராளமான ரோஹிங்யா முஸ்லிம்கள் உயி ரிழந்தனர். இதையடுத்து நடைபெற்ற மோதல்களில் பொதுமக்களும் தப்பியோடினர். பெரும்பாலான ரோஹிங்யா முஸ்லிம்கள், நாஃப் ஆற்றைக் கடந்து பங்ளாதேஷ் நாட்டுக்குச் சென்றனர். இந்நிலையில் வெள்ளிக் கிழமை அன்று மேலும் 16 உடல்கள் கடற்கரையோரம் ஒதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதன் மூலம் படகு மூழ்கி இறந்தவர்களுடன் சேர்த்து மொத்தம் 40 ரோஹிங்யா முஸ்லிம்கள் மாண்டனர்.