ஆர்சிஐ செலாவணி விசாரணை: "ஆச்சரியத்தில்" அன்வார் இப்ராகிம்

ஆர்சிஐ செலாவணி விசாரணை: "ஆச்சரியத்தில்" அன்வார் இப்ராகிம்

1 mins read
c557542a-dd84-475b-a85c-6d12a2e72322
-

கோலாலம்பூர்: மலேசியாவின் பேங்க் நெகாரா அந்நியச் செலாவணி நட்டம் மீதான அரச ஆணையத்தின் விசாரணையில் சாட்சியமளிக்க முன்னாள் நிதி அமைச்சர் அன்வார் இப்ராகிம் அழைக்கப்படுவது பற்றி அரச ஆணையம் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது குறித்து ஆச்சரியம் அடைந்துள்ளதாக அன்வார் கூறுகிறார். தமது சாட்சியத்தைச் செவிமெடுக்காமல் இந்த அரச ஆணைய விசாரணை முடிவுற்றால் அது கேலிக் கூத்தாகும் என்றார். இதுவரையில் நடந்த விசாரணையில் தம்மைப் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டது தாம் அந்த விசாரணையில் சாட்சியமளிக்க அனுமதிக்கப்பட வேண்டியது தட்ட முடியாததாக ஆகியுள்ளது என்று அவர் மேலும் கூறினார். அரசாங்கத்தின் முன்னைய தலைமைச் செயலாளரான முகம்மட் சீடெக் ஹசான் இந்த அரச ஆணைய விசாரணைக்குத் தலைமை ஏற்றுள்ளார். 1980-- 1990ஆம் ஆண்டுகளுக்கிடையில் பேங்க் நெகாரா அடைந்த அந்நியச் செலவாணி நட்டம் குறித்த ஆய்வு மேற்கொள்வது அரச ஆணையத்தின் பணியாகும். இக்காலக்கட்டத்தில் அன்வார் நிதி அமைச்சராகவும் மகாதீர் பிரதமராகவும் இருந்தனர்.