வாஷிங்டன்: தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்கக் கடற்படை சுற்றுக் காவல் பணியில் ஈடுபடு வதற்கு முன்னேற்பாடாக செயல் திட்டம் ஒன்றை முதன் முறையாக அமெரிக்கா வகுத்துள்ளது. அத் திட்டத்தின்படி அடுத்த சில மாதங்களில் அமெரிக்கக் கடற்படை இரண்டு அல்லது மூன்று முறை சுற்றுக்காவல் பணியில் ஈடுபடும். தென்சீனக் கடல் பகுதியில் சுதந்திரமான கடல் பயணத்தை உறுதி செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்தக் கடல் பகுதியில் பெரும் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. பிலிப்பீன்ஸ், வியட்னாம், மலேசியா, புருணை, மலேசியா, தைவான் ஆகிய நாடுகளும் அந்த கடல் பகுதிக்கு உரிமை கொண்டாடி வருகின்றன.
தென்சீனக் கடலில் அமெரிக்காவின் சுற்றுக் காவல்
1 mins read

