ஆஸ்திரேலிய படை வீரர்களால் ஆப்கானில் போர்க்குற்ற அபாயம்

ஆஸ்திரேலிய படை வீரர்களால் ஆப்கானில் போர்க்குற்ற அபாயம்

1 mins read

மெல்பர்ன்: ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றம் தொடர்பாக விவரம் அறிய மக்களிடம் ஆஸ்திரேலிய ஆயுதப் படை தகவல் கேட்டுள்ளது. இது தொடர்பான பல ஆருடங்கள் பரவி வருகின்ற வேளையில் உண்மை நிலையைக் கண்டறிய முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையே இதுவாகும். ஆப்கானிஸ்தான் இளைஞர் படுகொலை, தற்காப்புப் படையின் ரகசியத் தகவல்கள் கசிவுகள் என பலதரப்பட்ட குற்றங்கள் நிகழ்ந்ததை ஒட்டி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இக்குற்றங்கள் 2002 முதல் 2016ஆம் ஆண்டு வரை நடந்தவை என ஆஸ்திரேலிய தற்காப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் தகவல் வெளியிட்டார். தகவல் அறிந்தவர்கள் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்கலாம் எனவும் அவர் கூறினார். விசாரணைக்கு இத்தகவல் பெரும் உதவியாக இருக்கும் எனவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.