டாக்கா: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்களுக்குப் பயந்து அங்கிருந்து வெளியேறும் ரோஹிங்யா முஸ்லிம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பங்ளாதேஷ் எல்லையில் ஆயிரக்கணக்கான ரோஹிங்யா அகதிகள் குவிந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 50,000 ரோஹிங்யா மக்கள் சண்டை நடக்கும் பகுதியிலிருந்து தப்பிச்சென்றிருப்பதாக ஐநா மதிப்பிட்டுள்ளது. ஆறுகள், மலைக்குன்றுகள், வயல்கள் இவற்றைக் கடந்து வந்த அவர்கள் எல்லையில் குவிந் துள்ளனர். பங்ளாதேஷிற்குள் நுழைய முடியும் என்ற நம்பிக்கை யுடன் அவர்கள் காத்திருக் கின்றனர். "மியன்மார் ராணுவம் எங்களைத் தாக்குகின்றது," என்று தப்பிவந்த ரோஹிங்யா மக்கள் கூறியதாக சிஎன்என் தகவல் தெரிவிக்கிறது. ராக்கைன் மாநிலத்தில் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் இனப்படுகொலை என்றும் ரோஹிங்யா அகதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த மாநிலத்தில் பயங்கரவாதி கள் வன்முறைச் சம்பவங்களைத் தூண்டிவிடுவதாக மியன்மார் அரசாங்கம் கூறுகிறது. சென்ற வாரத்தில் அங்கு 2,600 வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பங்ளாதேஷ் எல்லையில் குவியும் ரோஹிங்யா மக்கள்
1 mins read

