ஏவுகணை உடன்பாட்டில் மாற்றம்: டிரம்ப் ஒப்புதல்

ஏவுகணை உடன்பாட்டில் மாற்றம்: டிரம்ப் ஒப்புதல்

1 mins read

சோல்: அமெரிக்காவும் தென் கொரியாவும் சேர்ந்து ஏற்கெனவே காணப்பட்ட ஏவுகணை உடன் பாட்டை மீண்டும் ஆய்வு செய்யவும் அதில் மாற்றங்களைச் செய்யவும் அவ்விரு நாடுகளின் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர். வடகொரியா இந்த வாரத் தொடக்கத்தில் மேற்கொண்ட ஏவுகணை சோதனையை அடுத்து தென்கொரியாவின் ஏவுகணை தயாரிப்புத் திறனை மேம்படுத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பும் தென்கொரிய அதிபர் மூன் ஜே உன்னும் இணங்கி யுள்ளனர். தற்போது வடகொரியா வின் மிரட்டல் அதிகரித்துள்ள நிலையில் அந்த உடன்பாட்டில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் செய்ய இணக்கம் காணப்பட் டுள்ளது. தென்கொரியா பல பில்லியன் டாலர் செலவில் அமெரிக்க ராணுவ தொழில் நுட்பத்தைப் பெறுவதற்கு திரு டிரம்ப் அங்கீகாரம் வழங்கியுள்ள தாக வெள்ளை மாளிகை தெரி வித்துள்ளது. தென்கொரியா அதன் தற் காப்புத் திறனை வலுப்படுத்திக் கொள்ள அதன் ஏவுகணை தயாரிப்புத் திட்டத்தை மேம்படுத்த விரும்புகிறது.