புளோரிடா: நாசாவின் விண்வெளி வீராங்கனையும் அவருடன் பயணம் செய்த இரு சகாக்களும் வெற்றிகரமாக நேற்று முன்தினம் கஸக்ஸ்தானில் தரை இறங்கினர். விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன், 57, விண்வெளிக் கலத்தில் மொத்தம் 665 நாட்கள் பயணம் செய்து, அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய பெண் என்ற சாதனையைப் புரிந்து உள்ளார். பூமிக்கு மேலே சுமார் 400 கி.மீ உயரத்தில் அமைக்கப் பட்டுள்ள அனைத்துலக விண் வெளி நிலையத்தில் ஒன்பது மாதங் களுக்கும் மேலாக இருந்து பல ஆய்வுகளை அவர் மேற்கொண் டுள்ளார். 1996 ஆம் ஆண்டில் விண்வெளி வீராங்கனையான விட்சன் விண்வெளி நிலையத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் கொண்டுள்ளார். விண்வெளியில் இருந்தவாரே புற்று நோயை உருவாக்கும் நுரை யீரல் திசுக்கள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டும் நான்கு முறை விண்வெளி நடைப்பயணத்தையும் முடித்து உள்ளார். தரை இறங்குவதற்கு முன்ன தாக விண்வெளியில் இருந்தபடியே பேட்டியளித்த விட்சன் இந்தப் பணியில் தான் மிகவும் பெருமிதம் கொள்ளவதாகவும் தாம் மேற்கொண்ட பல பணிகளில் இப்பணி மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்ததாக வும் கூறினார். விண்வெளி ஆய்வுக்கூடத்தில் பெக்கி விட்சன் (வலது). படம்: நாசா
665 நாட்கள் விண்வெளிப் பயணம்; வீராங்கனையின் சாதனை
1 mins read
-

