மலேசியா: கடையை நாடி வந்த முதலை

மலேசியா: கடையை நாடி வந்த முதலை

1 mins read
e7d42072-0120-4dba-a2a6-c3303eb6b763
-

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் சுமார் ஐந்து மீட்டர் நீளமுள்ள பெரிய முதலை ஒன்று பிடிபட்டுள்ளது. வெஸ்ட்லேக் லிம்பாங் குடியிருப்புப் பகுதியில் வாகன சக்கரங்கள் பழுதுபார்க்கப்படும் கடை ஒன்றினுள் நேற்றுக் காலை 8.15 மணியளவில் அந்த முதலை காணப்பட்டது. தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற லிம்பாங் தீயணைப்பு, மீட்புப் படையினர் கிட்டத்தட்ட ஆயிரம் கிலோ எடையுள்ள அந்த முதலையைப் பிடித்துக் கட்டினர். பின்னர் பாரந்தூக்கி மூலம் லாரியில் ஏற்றி எடுத்துச் சென்றனர். வனவிலங்கு அதிகாரிகளிடம் முதலை ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. படம்: த ஸ்டார்