இன்னொரு சோதனைக்கு வடகொரியா ஆயத்தம்

இன்னொரு சோதனைக்கு வடகொரியா ஆயத்தம்

1 mins read

வடகொரியா மேலும் ஓர் ஏவு கணைச் சோதனைக்குத் தயாராகி வருவதற்கான அறிகுறிகள் தென் படுவதாக தென்கொரியா தெரி வித்துள்ளது. அந்தச் சோதனை கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவு கணை தொடர்பானதாக இருக்கக் கூடும் என்று தென்கொரிய தற் காப்பு அமைச்சு நேற்று தெரி வித்தது. பியோங்யாங் நேற்று முன் தினம் நடத்திய ஆறாவது அணு வாயுதச் சோதனையை மேற்கோள் காட்டிய அமைச்சு, "ஞாயிற்றுக் கிழமை சோதனையிலிருந்து கண்காணிக்கப்பட்டபோது வட கொரியா மேலும் ஓர் ஏவுகணைச் சோதனைக்குத் தயாராகிவரு வதை உணர முடிந்தது," என்று தெரிவித்தது. இருப்பினும், வடகொரியா முயன்றுவரும் அடுத்த கட்ட சோதனை தொடர்பான மேல் விவ ரங்களை அது வெளியிடவில்லை. எப்போது அச்சோதனை நடை பெறக்கூடும் என்பதையும் தென் கொரிய தற்காப்பு அமைச்சு தெரிவிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட சோதனையின்போது ஏற்பட்ட வெடிப்பு 50 கிலோ டன் அளவுக்குப் பலமாக இருந்ததாக தென்கொரிய நாடாளுமன்ற அவசரக் கூட் டத்தில் அமைச்சு குறிப்பிட்டது.