ரோஹிங்யா அகதிகளுக்கான உதவிக்குழுக்கள் தவிப்பு

ரோஹிங்யா அகதிகளுக்கான உதவிக்குழுக்கள் தவிப்பு

1 mins read

மியன்மாரில் கடந்த மாதம் வன் முறை வெடித்தது முதல் கிட்டத் தட்ட 90,000 ரோஹிங்ய மக்கள் பங்ளாதேஷ் நோக்கி ஓடியுள்ள தாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு அதிகப்படியான அகதி கள் வருவதன் காரணமாக உதவி அமைப்புகளும் சமூக அமைப்பு களும் நெருக்கடியைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வந்துசேர்ந்த பல் லாயிரம் அகதிகளுக்கு அவை ஏற்கெனவே உதவி வருகின்றன. கடந்த மாதம் 25ஆம் தேதி மியன்மாரில் பத்துக்கு மேற்பட்ட போலிஸ் சாவடிகள் மீதும் ஒரு ராணுவத் தளம் மீதும் ரோஹிங்ய கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத் தியதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. அதனைத் தொடர்ந்து ராணுவம் பெரிய அளவிலான நடவடிக்கையில் இறங்கியது. வன் முறையிலும் ராணுவ நடவடிக்கை யிலும் கிட்டத்தட்ட 400 பேர் வரை கொல்லப்பட்டனர். வீடுகள் கொளுத்தப்பட்டதற் கும் பொதுமக்கள் கொல்லப்பட்ட தற்கும் ரோஹிங்ய கிளர்ச்சியாளர் களே பொறுப்பு என்று மியன்மார் அதிகாரிகள் பழிசுமத்தியுள்ளனர்.