புதிய ஒரு பேருந்துச் சந்திப்பு நிலையத்தையும் இப்போதைய புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி மற்றும் எம்ஆர்டி ரயில் நிலையங்களையும் ஒருங்கிணைத்துள்ள புதிய புக்கிட் பாஞ்சாங் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் இரண்டு ஆண்டு தாமதத்திற்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டது-. அந்த மையம் 6,800 சதுர மீ. பரப்பளவில் அமைந்திருக்கிறது. அதை எஸ்எம்ஆர்டி நிறுவனம் நிர்வகித்து நடத்துகிறது. சிங்கப் பூரில் இத்தகைய ஒன்பதாவது மையம் இதுவாகும். எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் அங்கு நேற்று பயணிகளுக்கு வழிகாட்டி உதவினர். புக்கிட் பாஞ்சாங் போக்குவரத்து மையம் பற்றி முதன்முதலாக 2012ல் அறிவிக்கப்பட்டது. 2015ல் அது திறக்கப்படும் என்று தொடக்கத்தில் திட்டமிடப் பட்டது.
ஆனால் அந்த மையத்தை உருவாக்க குத்தகை பெற்ற சிம் லியான் குரூப் நிறுவனம் மையத் தைக் கட்டுவதில் பல சிரமங் களை எதிர்நோக்கியதன் காரண மாக திட்டம் இரண்டாண்டு தாம தம் அடைந்தது.

