மலேசியாவுக்கு புதிய போலிஸ் தலைவர்

மலேசியாவுக்கு புதிய போலிஸ் தலைவர்

1 mins read
0558bf5f-5f54-4da9-99e7-cd7e1818b3be
-

கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய போலிஸ் தலைவராக முஹமட் ஃபுஸி ஹாருன் நேற்று முதல் பொறுப் பேற்றுள்ளார். போலிஸ் கண்காணிப்பாளர் காலித் அபு பக்கர் ஓய்வு பெறுவதை தொடர்ந்து முஹமட் ஃபுஸிக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது. திரு முஹமட் ஃபுஸி பயங்கர வாத எதிர்ப்பு நடவடிக்கை சிறப்புப் பிரிவின் இயக்குநராக இதற்கு முன்பணியாற்றியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான அவரின் பரந்த அனுபவம் இப்பதவிக்கு அவரை உயர்த்தியுள்ளது. மானுடவியல், சமூகவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ள இவர் ஓய்வு பெறுமுன் இரண்டு வருட காலம் இந்தப் புதிய பொறுப்பை வகிப்பார் என அறியப்படுகிறது. கோலாலம்பூர் போலிஸ் பயிற்சி மையத்தில் நடந்த பதவி ஒப்படைப்பு விழாவில் பேசிய அவர், தன்மீது நம்பிக்கை வைத்து இப்பொறுப்பை வழங்கிய மேல் அதிகாரிகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

திரு முஹமட் ஃபுஸி. கோப்புப் படம்: மலேசிய ஊடகம்