வடகொரியாவின் ஹைட்ரஜன் குண்டு சோதனை: கதிர்வீச்சு தென்படவில்லை

வடகொரியாவின் ஹைட்ரஜன் குண்டு சோதனை: கதிர்வீச்சு தென்படவில்லை

1 mins read

தோக்கியோ: வடகொரியாவின் ஹைட்ரஜன் குண்டு சோதனைக் குப் பிறகு எந்தவித கதிர்வீச்சும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஜப்பானும் சீனாவும் தெரிவித் துள்ளன. பூமிக்கடியில் ஹைட்ரஜன் குண்டை வெடிக்கச் செய்து பரி சோதித்ததாக வடகொரியா பெருமையுடன் கூறியது. இதனால் கதிரியக்கக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் அண்டை நாடுகளிடையே பர வியது. இந்நிலையில் செய்தியாளர் களிடம் பேசிய ஜப்பானிய அரசு உயர் அதிகாரியான யோஹிஹைட் சுகா, நாடு முழுவதும் கண் காணிக்கப்பட்டதில் வித்தியாச மாக எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லை. காற்றிலும் கதிர்வீச்சு தென்படவில்லை என்றார் அவர். சீனாவின் சுற்றுப்புற அமைச்சும் கொரிய எல்லையோரம் கதிர்வீச்சு அளவு வழக்க நிலையிலேயே இருந்தது என்று குறிப்பிட்டது.

இதற்கிடையே வடகொரியா விவகாரத்தில் தென்கொரியா சமாதான போக்கை கடைப்பிடிக் கிறது என்று டுவிட்டர் பதிவில் அதிபர் டிரம்ப் குறைகூறினார். இதனால் தென்கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டது. இதனை மறுத்த தென்கொரிய அதிபர் மூன் ஜேயின் அலுவலகம், அணுவாயுதமற்ற அமைதியான சூழலுக்காக தனது அரசு தொடர்ந்து பாடுபடும் என்று கூறினார். ஆனால் அதிபர் டிரம்ப், ஏன் நட்பு நாட்டையே குறைகூறினார் என்பது புரியாமல் தென்கொரிய தலைவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.