சீனா-மலேசிய துறைமுக கூட்டணியில் 5 துறைமுகங்கள்

சீனா-மலேசிய துறைமுக கூட்டணியில் 5 துறைமுகங்கள்

1 mins read

கோலாலம்பூர்: சீனா-மலேசியா துறைமுக கூட்டணியில் ஐந்து புதிய துறைமுகங்கள் இணைய உள்ளன. மலேசிய தரப்பிலிருந்து கெமமான் துறைமுக ஆணையம், கூச்சிங் துறைமுக ஆணையம், சாபா துறைமுக ஆணையமும் சீன தரப் பிலிருந்து தியான்ஜின் துறைமுகமும் ஸிங்டாவோ துறைமுகமும் இக்கூட்டணியில் இணைவதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய் கூறியுள்ளார். இதன்மூலம் இக்கூட்டணியில் மொத்தம் 21 துறைமுகங்கள் இடம்பெறு கின்றன. துறைமுகக் கூட்டணியின் இரண்டாம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய அமைச்சர், "கடந்த 2009 ஆண்டு முதல் மலேசியாவின் பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா விளங்கு கிறது," என்றார். மேலும் ஆசியான் பகுதியில் மலேசியா வை தளவாட மையமாக முன் நிறுத்தவும் துறைமுகத்தின் உள் கட்டமைப்பை வலுப்படுத்தி சரக்கு கப்பல்களின் போக்கு வரத்தை அதிகரிக்கவும் இக் கூட்டணி வழிசெய்யும் என்றார்.