மியன்மார்: கிளர்ச்சியாளர்களைப் பிடிக்க ஒத்துழைக்குமாறு கோரிக்கை

மியன்மார்: கிளர்ச்சியாளர்களைப் பிடிக்க ஒத்துழைக்குமாறு கோரிக்கை

1 mins read

யங்கூன்: கிளர்ச்சியாளர்களைப் பிடிக்க ஒத்துழைப்பு நல்கு மாறு வடமேற்குப் பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களை மியன் மார் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கிளர்ச்சியாளர்களின் தாக்குதல், ராணுவத்தினரின் பதிலடி ஆகியவற்றில் சிக்கி கடந்த வாரம் சுமார் 400 பேர் வரை மாண்டுபோயிருக்கலாம் என்று சொல்லப்பட்டது. 'ஏஆர்எஸ்ஏ' எனும் அரசுக்கு எதிரான கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகளைத் தேடி பாதுகாப்புப் படைகள் கிராமத்துக்குள் பிரவேசிக்கும் போது அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு மௌங்டாவ் பகுதியில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது. பாதுகாவலர்கள் கூடங்களின் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்ததை அடுத்து தேடுதல் வேட்டையை அரசு முடுக்கிவிட்டுள்ளது. வடக்கு ராக்கைன் பகுதியில் உள்ள மௌங்னி கிராமத்தினர் இரண்டு 'ஏஆர்எஸ்ஏ' உறுப்பினர்களைப் பிடித்து ஒப்படைத்ததாகவும் கூறப்பட்டது.