மலேசிய இந்தியர் காங்கிரஸ்: தேர்தலில் 60% புதிய வேட்பாளர்கள்

மலேசிய இந்தியர் காங்கிரஸ்: தேர்தலில் 60% புதிய வேட்பாளர்கள்

1 mins read

யோங் பெங்: மலேசியாவின் 14வது பொதுத் தேர்தலில் தமக்கு ஒதுக் கப்படும் தொகுதிகளில் பாதிக்கும் மேல் புதியவர்களை வேட்பாளராக நிறுத்த மலேசிய இந்தியர் காங்கிரஸ் திட்டமிடுகிறது. 60% வரை புதிய முகங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் டாக்டர் எஸ் சுப்பிரமணியம் கூறியுள்ளார். பொதுவாக ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் அந்தக் கட்சி போட்டியிடும். ஜோகூரில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் தங்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அவற்றில் புதுமுகங்கள் கட்சியைப் பிரதி நிதிப்பர் என்றும் அக்கட்சியின் வருடாந்திர பொதுக்கூட்டத்தை ஜோகூரில் நேற்று தொடங்கிவைத்த பிறகு அவர் குறிப்பிட்டார். தகுதியுள்ள சிலரது பெயர்ப் பட்டியல் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருப்ப தாகவும் அவர் சொன்னார். மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சிக்காக ஒதுக்கப்படும் சில இடங்களை அம்னோ எடுத்துக் கொள்ளக்கூடும் என்று சில அறிக்கைகள் குறிப்பிட்டாலும், "இறுதி முடிவை தேசிய முன் னணிக் கூட்டணியின் தலைமை நிர்ணயிக்கும்," என்றும் அவர் சொன்னார்.