கோத்தா கினபாலு: அபு சாயஃப் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த போராளிகள் என்று சந்தேகிக்கப் படும் எட்டுப் பேர் கோலாலம்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தெற்கு பிலிப்பீன்ஸ் பகுதியை மையமாகக் கொண்டு செயல்படும் அபு சாயஃப் அமைப்பின் தலைவர் களில் ஒருவனான ஹாஜர் அப்துல் முபின் உட்பட எண்மரை சென்ற மாதம் 30 ஆம் தேதி கைது செய்ததாக மலேசிய போலிசார் தெரிவித்தனர். அபு அஸ்ரீ எனவும் அழைக்கப் படும் ஹாஜர், மற்றொரு பிலிப் பினோவான அப்ரகாம் எம்புங், பிலிப்பினோ வம்சாவளியைச் சேர்ந்த ஆறு மலேசியர்கள் ஆகி யோருடன் கைதுசெய்யப்பட்டான்.
பணத்துக்காக ஆட்களைக் கடத்தும் 'லக்கி 9' எனும் ஜோலோ வில் இயங்கும் அமைப்பைச் சேர்ந்தவன் இந்த அபு அஸ்ரீ, 25, என்று சொல்லப்படுகிறது. ஜோலோ, பாசிலோன் தீவு ஆகிய வற்றில் உள்ள காடுகளில் வசிக் கும் அபு சாயஃப் குழுக்களுடன் அபு அஸ்ரீக்குத் தொடர்பு இருப்ப தாகவும் குறிப்பிடப்படுகிறது. ஜோலோ நகரில் 'லக்கி 9' கும்பல் பணத்துக்காக ஆட்களைக் கடத் தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட தாக பிலிப்பீன்ஸ் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மலேசியர் கள் கோலாலம்பூரில் வேலை செய்பவர்கள் என்றும் அவர்கள் 20 முதல் 52 வயதுக்குட்பட்டவர் கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

