தென்கொரிய ஏவுகணைகளில் இனி எடைமிக்க வெடிபொருள்

தென்கொரிய ஏவுகணைகளில் இனி எடைமிக்க வெடிபொருள்

1 mins read

தென்கொரிய ஏவுகணைகள் எடுத் துச்செல்லும் வெடிபொருட்களுக் கான உச்ச எடை வரம்பு நீக்கப் படுகிறது. தொடர்ந்து அணுவாயுத, ஏவு கணைச் சோதனைகளில் வட கொரியா ஈடுபட்டு வருவதால் கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, ஒருவேளை போர் நிகழும்பட்சத்தில் பதிலடி கொடுக்க தென்கொரியா வும் ஆயத்தமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தனது ஏவுகணைகள் ஏந்திச்செல்லும் வெடிபொருட்களுக்கான உச்ச எடை வரம்பை நீக்க தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் அமெ ரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்துடன், எதிர்காலத்தில் அமெரிக்காவிடம் இருந்து நவீன ரக ஆயுதங்களை வாங்கும் சாத் தியம் உள்ளதையும் தென்கொரியப் பிரதமர் அலுவலகம் ஒத்துக் கொண்டுள்ளது.