இயந்திர கோளாறு: ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் அவசர தரையிறக்கம்

இயந்திர கோளாறு: ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் அவசர தரையிறக்கம்

1 mins read

தோக்கியோ: நியூயார்க்கிற்கு புறப்பட்ட ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக தோக்கியோவில் தரையிறக்கப்பட்டது. பறவை தாக்கியதால் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக விமான நிறுவனம் முன்னதாக கூறியது. பிறகு அதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றும் இயந்திரக் கோளாறே அதற்கு காரணம் என்றும் நிறுவனம் தெரிவித்தது. 233 பயணிகளையும் 15 சிப்பந்திகளையும் ஏற்றிக்கொண்டு தோக்கியோவின் ஹனிடா விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் நேற்று சிங்கப்பூர் நேரப்படி காலை 10 மணிக்கு புறப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் கழித்து அந்த போயிங் 777ரக விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அவசரமாக தரையிறங்குவதற்கு முன்பாக விமானத்தின் எடையை குறைப்பதற்காக காற்றிலேயே எரிபொருள் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது. விமானத்திற்கு வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.