நஜிப்: இயக்குநர் சபையில் பெண்கள் அவசியம்

நஜிப்: இயக்குநர் சபையில் பெண்கள் அவசியம்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் பங்குச்சந்தை பட்டியலில் இடம் பெற்றுள்ள பொதுத்துறை நிறுவனங் களின் இயக்குநர் சபைகளில் பெண் களும் அவசியம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். பெண்கள் யாருமே இல்லாத இயக்குநர் சபையைக் கொண்டுள்ள நிறுவனங்களின் பெயர்களை அடுத்த ஆண்டு அறிவிக்கப்போவதாக திரு நஜிப் எச்சரித்தார். பொதுத்துறை நிறுவனங்கள் இந்த விதிமுறையை பின்பற்றினால் மட்டுமே தனியார் துறை நிறுவனங்களின் இயக்குநர் சபைகளில் 30 விழுக்காடு பெண்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக அடைய முடியும் என்றும் திரு நஜிப் ரசகூறினார். சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் வரை பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குநர் சபைகளில் 16.8 விழுக்காடு பெண்கள் இடம்பெற்றுள்ளனர். முப்பது விழுக்காட்டை எட்ட இன்னும் 13.2 விழுக்காடு மட்டுமே குறைவாக உள்ளது என்றும் அவர் சொன்னார். சென்ற திங்கட்கிழமை நடந்த 'டிஎன்50' எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது பெரும் வரவேற்புக்கிடையில் திரு நஜிப் ரசாக் இவ்வாறு கூறினார்.