யங்கூன்: மியன்மாரில் வசிக்கும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவத்தினர் நடத்தும் தாக்குதல்கள் உடனடி யாக நிறுத்தப்பட வேண்டும் என்று பங்ளாதேஷ், இந்தோனீசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகள் மியன்மாரின் தலைவி ஆங் சான் சூச்சியை நெருக்கி வருகின்றன. சிறுபான்மை இனத்தவர் களான ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மாரில் பல துயரங்களை அனுபவித்து வரும் வேளையில் ஆளும் கட்சி தலைவி சூச்சி அம்மையார் மெளனமாக இருப்பது குறித்து மேற்கத்திய நாடுகளும் அவரை குறை கூறி வருகின்றன.
மியன்மாரில் ராக்கைன் மாநிலத் தில் கடந்த மாதம் வன்முறை வெடித்தது முதல் கிட்டத்தட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் 125,000 பேர் உயிருக்குப் பயந்து அங் கிருந்து பங்ளாதேஷ்க்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் கூறு கின்றன. மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் சந்தித்து வரும் இன்னல்களைப் போக்க உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆங் சான் சூச்சி அம்மையாரை உலக நாடுகள் நெருக்கி வரு கின்றன. ராக்கைன் மாநிலத்தில் ரோஹிங்யா முஸ்லிம்கள் நடத்தப் படும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தோனீசியாவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் வேளையில் அது தொடர்பில் பேச்சு நடத்த இந்தோனீசிய அமைச்சர் ரெட்னோ மர்சுதி மியன்மார் சென்றிருந்தார்.

