கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி விவகாரம் குறித்த அமெரிக்க விசாரணையில் சாட்சியமளிக்க பலர் அஞ்சுவதாக அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 4.5 பில்லியன் அமெரிக்க டாலரை உயர் அதிகாரிகள் தவறான முறையில் கையாண்டதை ஒட்டி அமெரிக்க நீதித் துறையிடம் சில புகார்கள் பதிவு செய்யப்பட்டன. லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள உச்ச நீதிமன்றம் சாட்சியாளர்களின் பெயரை ரகசியமாக வைத்திருக்கும்படி கூறியது. அதன் அடிப்படையில் விசாரணை நடந்ததில் சாட்சியாளர்கள் மட்டுமில்லாமல் அவர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 30ஆம் நாள் முன்னாள் மலேசிய அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அப்துல் கனி பட்டேலின் கார் ஓட்டுநர் துப்பாக்கிச் சூட்டில் இறந்த விவகாரம் 1எம்டிபி விசாரணையில் ஒத்துழைக்கக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையாகக்கூட இருக்கலாம் என நம்பப்படுகிறது.
மலேசியா: 1எம்டிபி நிதி விவகாரம் - விசாரணையில் சாட்சியமளிக்க பயம்
1 mins read

