கரீபியன் தீவுகளில் புயலின் தாக்கம்: 8 பேர் பலி

கரீபியன் தீவுகளில் புயலின் தாக்கம்: 8 பேர் பலி

1 mins read

வா‌ஷிங்டன்: அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள 'இர்மா' புயலின் தாக்கத்தினால் கரீபியன் கடல் பகுதியில் உள்ள செயிண்ட் மார்டின் தீவில் குறைந்தது 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புயல் காரணமாக கரீபியத் தீவுகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சுழன்று அடிக்கும் காற்றில் வீடுகளின் கூரைகள் பறந்ததாகவும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் குடியிருப்பாளர்கள் கூறினர். பல மரங்கள் வேருடன் சாய்ந்தன. தெருக்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாகவும் ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

புயலில் செயிண்ட் மார்டின் தீவின் 95 விழுக்காடு பகுதி நாசமானதாக உள்ளூர் மன்றம் ஒன்றின் தலைவர் டேனியல் கிப்ஸ் கூறியுள்ளார். பார்புடா தீவிலும் இப்புயல் பெரும் சேதத்தை ஏற்பபடுத்தியுள்ளது. இர்மா புயல் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் இதனால் பேரழிவு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் கரீபியன் தீவுகளிலும் அமெரிக்க மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டய. குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஒரு சில அமெரிக்க விமான நிலையஙங்களில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,