மணிலா: சாபாவில் கடந்த நவம்பர் மாதம் அபு சாயஃப் குழுவினரால் கடத்தப்பட்ட இரு இந்தோனீசியர்களை பிலிப்பீன்ஸ் பாதுகாப்புப் படையினர் நேற்று பத்திரமாக மீட்டிருப்பதாக அந் நாட்டு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சபருதீன் பின் கோனி, சவல் பின் மேர்யாம் ஆகிய அந்த இரு இந்தோனீசியர்களும் அபு சாயஃப் போராளிகளின் கோட் டையாகக் கருதப்படும் சுலு மாநிலத்தில் உள்ள வட்டாரத் தில் காணப்பட்டதாகவும் ஒரு வேனுக்குள் இருந்த அந்த இருவரையும் பாதுகாப்புப் படை யினர் மீட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார். அந்த வேனில் வேறு யாரேனும் இருந் தனரா என்ற விவரம் தெரிய வில்லை. அவ்விருவரும் மீட்கப் படுவதற்கு முன்பு தலிபாவ் வட்டாரத்திற்கு அருகே அபுசாயஃப் துப்பாக்கிக்காரர்கள் 20 பேருக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் 5 போராளிகள் கொல்லப்பட்டனர்.
அபு சாயஃப் குழுவினரிடம் இன்னும் 15 பேர் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. வெளிநாட்டி னரைக் கடத்திச்சென்று பிணைப்பணம் கேட்டு மிரட்டு வது உள்ளிட்ட பல்வேறு அட்டூழி யங்களில் அது ஈடுபட்டுள்ளது.

