மூன்: கொரிய தீபகற்பத்தில் நிச்சயம் போர் மூளாது

மூன்: கொரிய தீபகற்பத்தில் நிச்சயம் போர் மூளாது

1 mins read

டோக்கியோ: வடகொரியா சில நாட்களுக்கு முன்பு மேற்கொண்ட அணுவாயுத சோதனை காரண மாக பதற்றம் அதிகரித்துள்ள போதிலும் கொரிய தீபகற்பத்தில் போர் மூளாது என்று தென்கொரிய அதிபர் மூன் ஜே உன் தெரி வித்துள்ளார். வடகொரியாவின் அணுவாயுதத் திட்டத்திற்கு எந்த வகையில் தீர்வு காணலாம் என்பது குறித்து ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.

ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டோக் கில் நடந்த பொருளியல் மாநாட்டில் உரையாற்றிய திரு மூன், வடகொரியா மீது உத்தேச புதிய தடைகள் குறித்து அந்த மூன்று நாடுகளின் தலைவர்கள் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறினார். வடகொரியப் பிரச்சினைக்கு அரசதந்திர ரீதியில் தீர்வு காண வேண்டும் என்பது தமது நோக்கம் என்றும் அவர் சொன்னார். அந்த மாநாட்டிற்குப் பிறகு திரு மூனும் ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபேயும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியபோது வட கொரியாவுக்கு நெருக்குதல் கொடுக்க தாங்கள் இருவரும் சம்மதித்ததாகக் கூறினர். வடகொரியாவுக்கு எதிராக புதிய தடைகள் விதிப்பதற்கு சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவை தாங்கள் நாடவிருப் பதாகவும் அவ்விரு தலைவர்களும் தெரிவித்தனர்.