கிம்மின் சொத்துகளை முடக்க அமெரிக்கா நடவடிக்கை

கிம்மின் சொத்துகளை முடக்க அமெரிக்கா நடவடிக்கை

1 mins read

நியூயார்க்: வடகொரியா மீது கடுமையான தடைகளை விதித்து நெருக்கடி கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐநா பாதுகாப்பு மன்றத்தில் அமெரிக்கா ஒரு வரைவு தீர்மானத்தைத் தாக்கல் செய்துள்ளது. பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களை வடகொரியாவுக்குக் கொண்டு செல்வதற்குத் தடை, வடகொரியாவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய் வதற்குத் தடை, வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்குச் சொந்தமான சொத்துகளை முடக்குவது மற்றும் அவர் பயணம் செய்வதற்குத் தடை ஆகிய அம்சங்கள் அத்தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளன. வடகொரிய கப்பல்களை இடைமறித்து அக் கப்பல்களில் ஆயுதங்கள் அல்லது எரிபொருள் கொண்டு செல்லப் படுகின்றதா என்பதை கண் காணிக்க அமெரிக்க கடற்படை மற்றும் விமானப் படைக்கு அதிகாரம் வழங்கக் கோரியும் அத்தீர்மானத்தில் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

ஐநா பாதுகாப்பு மன்றத்தில் அங்கம் வகிக்கும் மற்ற நாடு களான சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை ஆதரித்து வாக்களிக்கும் பட்சத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேறும். வடகொரியா மீது ஐநா மேலும் நடவடிக்கைகள் எடுப்பதற்கு சீனா அதன் ஆதரவைத் தெரிவித் துள்ளது.