மியன்மாரின் ராக்கைன் மாநிலத் தில் ரோஹிங்யா மக்களுக்கு எதி ராகப் பெருகிவரும் வன்முறைக்கு முடிவுகட்டுமாறு மலேசியாவின் அம்னோ இளையர் பிரிவு ஐக் கிய நாடுகள் மன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கையை வலி யுறுத்தும் தீர்மானக் குறிப்பு ஒன்றை கோலாலம்பூரில் உள்ள ஐநாவின் மலேசிய தலைமைய கத்தில் ஐநா உள்நாட்டு ஒருங் கிணைப்பாளர் ஸ்டீஃபன் பிசீஸ் னரிடம் இப்பிரிவினர் நேற்றுக் காலை சமர்ப்பித்தனர். பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அந்தத் தீர்மானக் குறிப்பில் மியன்மாரில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் படும் துயரத்தின் மீது சிறப்புக் கவனம் செலுத்துமாறு முக்கியமாக வலி யுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக ஐநா அலுவல கத்தின் முன்பு ரோஹிங்யா விவ காரத்தை வலியுறுத்தி அம்னோ இளையர் பிரிவினர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். "ரோஹிங்யா மக்களுக்கு நம் மால் இயன்ற மனிதாபிமான உதவிகளைச் செய்யலாம்," என்று அம்னோ இளையர் பிரிவு துணைத் தலைவர் கைருல் அஸ்வான் ஹாருன் செய்தியாளர் களிடம் தெரிவித்தார். கடந்த நவம்பரிலும் இதே விவகாரத்தை வலியுறுத்தி இளையர் பிரிவு மனு கொடுத்ததாக அவர் தெரி வித்தார்.
கோலாலம்பூரில் உள்ள மியன்மார் தூதரகம் முன்பு ரோஹிங்யா அகதிகள் போராட்டம் நடத்தினர். படம்: ராய்ட்டர்ஸ்

