சோல்: வடகொரியா மீண்டும் சினமூட்டும் செயலில் ஈடுபடு கிறதா என்பதை தென்கொரிய அதிகாரிகள் அணுக்கமாக கண் காணித்து வருவதாக தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சு தெரிவித்ததது. "வடகொரியா வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட்டிருப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படுகிறதா என்பதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்," என்று அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார். வடகொரியா தோற்றுவிக்கப் பட்டதன் ஆண்டு நிறைவை இன்று கொண்டாடும் வேளையில் அந்நாடு ஏவுகணை சோதனையை மேற்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்ற ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி வடகொரியா அதன் ஐந்தாவது ஏவுகணை சோத னையை மேற்கொண்டது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு அடுத் தடுத்து ஏவுகணை சோதனை களையும் மேற்கொண்டது.
வடகொரியா சென்ற மாதம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் இரு ஏவுகணைகளைப் பாய்ச்சி சோதனை செய்தது. அத்துடன் சென்ற ஞாயிற்றுக்கிழமை ஹைட்ரஜன் குண்டு சோதனையை வடகொரியா மேற்கொண்டது. அந்த சோதனைகளைத் தொடர்ந்து வடகொரியா இன்றும் நாளையும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்யக்கூடும் என்று தென்கொரிய உளவுத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அனைத்துலக நாடுகளின் கண்டனங்களையும் பொருட் படுத்தாது வடகொரியா தொடர்ந்து அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. வடகொரியாவின் இத்தகைய மிரட்டலுக்கு எந்த வகையில் பதிலடி கொடுப்பது என்பது குறித்து அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் தீவிரமாக ஆலோசித்து வரு கின்றன.
வடகொரியா மீது ஏற்கெனவே ஐநாவும் அமெரிக்காவும் பல தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில் அந்நாட்டுக்கு எதிராக மேலும் பல புதிய தடைகளை விதிக்க வகை செய்யும் நகல் தீர்மானம் ஒன்றை ஐநா பாதுகமாப்பு மன்றத்திடம் அமெரிக்கா தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் வடகொரியா மீது கடும் நடவடிக்கை எடுக்க சீனா அதன் ஆதரவைத் தெரிவித்துள்ளது. இருப்பினும் வடகொரியா மீது தடைகள் விதிப்பதால் மட்டும் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது என்று ரஷ்ய அதிபர் புட்டின் கூறியுள்ளார். இந்நிலையில் வடகொரியாவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்க ராணுவ நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய பட்டியல் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடம் தாக்கல் செய்திருப்பதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் இந்த வாரம் கூறினார்.

