மெக்சிகோவை உலுக்கிய 8 ரிக்டர் நிலநடுக்கம்

மெக்சிகோவை உலுக்கிய 8 ரிக்டர் நிலநடுக்கம்

1 mins read
23926716-3c40-454c-89e7-61222f17d740
-

மெக்சிகோ சிட்டி: பசிபிக் கடலோரப் பகுதியில் அமைந் துள்ள மெக்சிகோவின் தெற்கு கடலோரப் பகுதிகளை நேற்று உலுக்கிய 8.1 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் பல கட்டடங்கள் சேதம் அடைந்த தாகவும் அதிகாரிகள் கூறினர். 1985 ஆம் ஆண்டுக்குப் பிறகு மெக்சிகோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது. தென்மேற்கு நகரான பிஜிஜி யாபனிலிருந்து சுமார் 87 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 70 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவான தாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது சுனாமி அலை எழுந்ததையடுத்து மெக்சிகோ, குவாட்டமாலா, எல் சல்வடார், கோஸ்ட்டா ரிக்கா, நிகராகுவா, பனாமா ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் அடுத்தடுத்து நில அதிர்வுகளும் ஏற்பட்டதாக குடி யிருப்பாளர்கள் கூறினர். மெக்சிகோ சிட்டியில் வசிக்கும் மக்கள் நிலநடுக்கத்தை நன்கு உணர முடிந்தது என்று கூறியுள்ளனர்.

நிலநடுக்கத்தின்போது வீடுகளை விட்டு வெளியில் ஓடிவந்த மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மெக்சிகோவை நேற்று 8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உலுக்கியது. படம்: ஏஎஃப்பி