மெக்சிகோ சிட்டி: குறைந்தபட்சம் 61 பேரைப் பலிகொண்ட மெக் சிகோ நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்பதற்காக போலிசார், ராணுவ வீரர்கள், அவசரகாலப் பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். மெக்சிகோவில் கடந்த 100 ஆண்டுகளில் நிகழ்ந்த ஆக சக்திவாய்ந்த நில நடுக்கம் என்று அது வருணிக்கப் படுகிறது. மாண்டோர் எண் ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக அதிகாரி கள் தெரிவித்தனர். மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட 8.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் வீடுகள், தேவாலயங்கள், பள்ளி கள் போன்றவை தரைமட்ட மாகின. இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்கள், சடலங்கள் போன்றவற்றைத் தேடும் பணி யில் மீட்புப் படையினர் ஈடு பட்டுள்ளனர். இதற்கிடையே, மெக்சிகோ வின் கிழக்குப் பகுதியை கடியா சூறாவளி தாக்கி பெருமழை பெய்துவருவதால் மலைப்பாங் கான பகுதிகளில் மோசமான வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்படக்கூடும் என அமெரிக்கா வின் தேசிய சூறாவளி நிலையம் தெரிவித்துள்ளது. மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசு வதாகவும் அது தெரிவித்தது.
மெக்சிகோவின் மாட்டியாஸ் ரொமேரோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துபோன சென்சேக்ஷன் ஹோட்டலில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. படம்: ஏஎஃப்பி

