முகாம்கள் அமைத்து உதவி வழங்க மியன்மார் முடிவு

முகாம்கள் அமைத்து உதவி வழங்க மியன்மார் முடிவு

1 mins read
fc0e9302-90b2-46f9-8468-973869857ae7
-

யங்கூன்: ராக்கைன் மாநிலத் துக்குள் இடம்பெயர்ந்துள்ள முஸ் லிம்களுக்கு உதவி வழங்கு வதற்காக முகாம்கள் அமைக்கப் படும் என மியன்மார் அரசாங்க ஆதரவு ஊடகம் நேற்று தெரி வித்தது. வன்முறை காரணமாக கடந்த இரு வாரங்களாக தங்கள் இருப்பிடத்தைவிட்டு ரோஹிங்யாக் கள் சிதறியோடும் வேளையில் நேற்று முதன்முறையாக மியன்மார் அரசாங்கம் உதவி குறித்த இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

சென்ற மாதம் 25ஆம் தேதி முதல் சுமார் 270,000 ரோஹிங் யாக்கள் பங்ளாதே‌ஷுக்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ராக்கைன் மாநிலத்திலிருந்து பசியுடனும் சக்தியிழந்தும் பங்ளா தே‌ஷுக்குள் நுழையும் அவர்கள் ஏற்கெனவே நிரம்பி வழியும் அகதிகள் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். உணவு, குடிநீர், இருப்பிடம், மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பல்லாயிரக்கணக்கானோர் ராக் கைன் மாநிலத்துக்குள்ளேயே குன்றுகள் போன்ற இடங்களில் வசித்துவருவதாகவும் கூறப் படுகிறது. வீடுகளை விட்டு வெளியேறி இருப்பிடமின்றி மியன்மாருக்குள் ளேயே தவிப்போருக்கு உதவிகள் வழங்கி ரோஹிங்யாக்களுக்கு பாதுகாப்பான பகுதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டு மென்று பங்ளாதேஷ் அரசு மியன்மாரிடம் கேட்டுக்கொண்டது.2017-09-10 06:00:00 +0800