பொம்மை துப்பாக்கியைக் காட்டி கொள்ளையடித்த இருவர் பிடிபட்டனர்

பொம்மை துப்பாக்கியைக் காட்டி கொள்ளையடித்த இருவர் பிடிபட்டனர்

1 mins read

புக்கிட் மெர்ட்டஜாம்: பொம்மைத் துப்பாக்கியுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் வலம் வந்த இருவர் தங்கள் எதிரில் அகப்பட்ட மனிதர்களிடம் அந்தத் பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்துச் சென்றதாகவும் அவ்விருவரையும் போலிசார் பின்னர் கைது செய்ததாகவும் மலேசியத் தகவல்கள் கூறின. ஜாலான் லிமாவ் எமாஸ் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை மடக்கி பொம்மைத் துப்பாக்கியைக் காட்டிப் பணம் மற்றும் நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பிய இரண்டு மணிநேரத்திற்குள் இந்தத் திருடர்களில் ஒருவன் பிடிபட்ட தாக போலிசார் கூறினர். மோட்டார் சைக் கிளின் பின்புறம் அமர்ந்துகொண்டு கொள்ளையடிப்பதற்கு உறுதுணையாக இருந்த மற்றோர் இளைஞனைக் காவல் துறையினர் இங்குள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் பின்னிரவு 2 மணியளவில் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளும் ஒரு பொம்மைத் துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன. இந்த மோட்டார் சைக்கிள் அண்மையில் சிம்பாங் அம்பாட்டிற்கு அருகே களவு போனது என்பது போலிசாருக்கு தெரியவந்துள்ளது.