'அமெரிக்காவின் மிரட்டலுக்கு எதிராகப் போராட தீவிர நடவடிக்கை எடுப்போம்'

'அமெரிக்காவின் மிரட்டலுக்கு எதிராகப் போராட தீவிர நடவடிக்கை எடுப்போம்'

1 mins read

சோல்: வடகொரியாவுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு மன்றம் புதிய தடைகளை விதித்துள்ள நிலையில் அமெரிக்காவின் மிரட் டலுக்கு எதிராகப் போராட தீவிர நடவடிக்கைகளை எடுக்கப் போவ தாக வடகொரியா மீண்டும் எச்சரித்துள்ளது. வடகொரியாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் தடை நடவடிக்கை பெரிதாக ஒன்றுமில்லை என்றும் வடகொரியாவுக்கு எதிராக இன்னும் கடுமையான நட வடிக்கைகள் தேவை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கும் நேரத்தில் வடகொரியா இவ்வாறு எச்சரித் துள்ளது. வடகொரியாவைத் தற்காப்பதற்கான நடவடிக்கைகள் இரு மடங்காக அதிகரிக்கப்படும் என்று வடகொரியா அறிவித்துள்ளது.