வன்முறைச் செயலை நிறுத்த மியன்மாருக்கு நெருக்குதல்

வன்முறைச் செயலை நிறுத்த மியன்மாருக்கு நெருக்குதல்

1 mins read
a33464be-4cae-46ab-838a-d6ac19a9b957
-

டாக்கா: மியன்மாரில் ராக்கைன் மாநிலத்தில் நீடிக்கும் ராணுவ நடவடிக்கைகளுக்குப் பயந்து அங்கிருந்து தப்பியோடிய ஆயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்ளாதே‌ஷில் தஞ்சம் அடைந்துள்ள வேளை யில் அந்த மாநிலத்தில் நடக்கும் வன்முறைச் செயல்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று மியன்மாருக்கு நெருக்குதல் அதிகரித்து வருகிறது. வன்முறைத் தாக்குதலை மியன்மார் ராணுவம் நிறுத்த வேண்டும் என்றும் சட்ட ஒழுங்கை பாதுகாப்பு அதிகாரி கள் மதித்து நடக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி யுள்ளது. ராக்கைன் மாநில மக்களுக்கு மியன்மார் அரசாங் கம் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்காவும் ஐநாவும் வலியுறுத்தி வருகின் றன.

பங்ளாதே‌ஷில் உதவிப்பொருட்களைப் பெற காத்திருக்கும் ரோஹிங்யா அகதிகள். படம்: ஏஎஃப்பி