வாஷிங்டன்: வாஷிங்டன் சென்றுள்ள மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசியபோது வர்த்தக உடன்பாடுகள் குறித்தும் பயங்கரவாத எதிர்ப்பு போராட்டம் குறித்தும் முக்கியமாக பேச்சு நடத்தினர். போயிங் ரக விமானங்கள் சம் பந்தப்பட்ட பெரிய அளவிலான வர்த்தக உடன்பாடுகள் குறித்து தாங்கள் பேச்சு நடத்தியதாக திரு டிரம்ப் கூறினார். பயங்கரவாத எதிர்ப்புப் போராட் டத்தில் மலேசியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை திரு டிரம்ப் பாராட்டினார். "நீங்கள் இங்கு வந்திருப்பதை நாங்கள் பெருமையாகக் கருது கிறோம்," என்று திரு டிரம்ப் மலேசியப் பிரதமர் நஜப்பிடம் செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார். ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவை கட்டுப்படுத்தும் அனைத் துலக முயற்சிகளில் மலேசியா முக்கிய பங்காற்றி வருகிறது என்றும் திரு டிரம்ப் கூறினார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் மலேசியப் பிரதமர் நஜிப்பை வரவேற்றார். படம்: ஏஎஃப்பி

