ஜப்பானை மூழ்கடிப்போம்; அமெரிக்கா சாம்பலாகும்: வடகொரியா மிரட்டல்

ஜப்பானை மூழ்கடிப்போம்; அமெரிக்கா சாம்பலாகும்: வடகொரியா மிரட்டல்

1 mins read

சோல்: வடகொரியா மீது ஐநா பாதுகாப்பு மன்றம் புதிய தடை களை விதித்துள்ள நிலையில் அத்தடைகளையும் ஐநா தீர்மானத் தையும் ஆதரிக்கும் ஜப்பானையும் அமெரிக்காவையும் நிர்மூல மாக்கப்போவதாக வடகொரியா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது. அணுவாயுதங்களைப் பயன் படுத்தி ஜப்பானை கடலில் மூழ் கடிக்கப் போவதாகவும் அமெரிக் காவை சாம்பலாக்கி இருளில் மூழ்கச் செய்யப்போவதாகவும் வடகொரியா அறிவித்துள்ளது. பியோங்யாங்கின் கொரிய ஆசிய பசிபிக் அமைதிக் குழு, ஐநா பாதுகாப்பு மன்றத்தையும் அதன் உறுப்பு நாடுகளையும் கடுமையாகச் சாடியது.

அணுகுண்டு வீச்சால் கடல் சூழ்ந்த பகுதியில் உள்ள நான்கு தீவுகள் மூழ்கடிக்கப்பட வேண் டும். நமக்கு அருகே ஜப்பான் இருப்பது இனி தேவையில்லை," என்று அக்குழு ஓர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாக வடகொரி யாவின் அதிகாரத்துவ செய்தி நிறுவனம் தகவல் வெளி யிட்டுள்ளது. வடகொரியா இம்மாதம் மூன்றாம் தேதி சக்திவாய்ந்த அணுவாயுத சோதனையை மேற் கொண்டது. அதன் காரணமாக தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது.