பேங்காக்: தென்தாய்லாந்தில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத் தின் மீது போராளிகள் மறைந் திருந்து தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும் சுமார் 20 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். யாலா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராணுவ வீரர் களை ஏற்றிச்சென்ற ஒரு வாகனம் சாலையோரமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் சிக்கியது. அதற்கு அரை மணி நேரத்திற்குப் பிறகு அந்த ராணுவ வாகனத்தைக் குறி வைத்து போராளிகள் 2வது வெடிகுண்டை வெடிக்கச் செய் தனர். தாய்லாந்தின் தெற்குப் பகுதி மாநிலங்களில் பிரிவினை வாதிகள் பல ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகின் றனர்.
தென் தாய்லாந்தில் போராளிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதில் காயம் அடைந்த ராணுவ வீரர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். அத்தாக்குதலில் கிராம மக்கள் இருவர் உட்பட 20 பேர் காயம் அடைந்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

