நியூயார்க்: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் வசிக்கும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படும் வேளை யில் அத்தகைய வன்முறைச் செயல்களை முடிவுக்கு கொண்டு வர உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது. முன்ன தாக ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ், ரோஹிங்யா மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருவதாகக் கூறினார். அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ராணுவத்தினரை அவர் கடுமை யாகச் சாடினார்.
'மியன்மாரில் வன்செயல்களை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை தேவை'
1 mins read

