வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய மக்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் கல்வி பயிலவும் தொடர்ந்து அங்கு தங்கவும் அனுமதிக்கும் வகையில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியினருடன் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஓர் உடன்பாடு செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவில் தங்குவதற்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாமல் இருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இதன் மூலம் பாதுகாக்கப்படுகின்றனர். முன்னதாக இம்மாதத் தொடக்கத்தில் திரு டிரம்ப், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா அறிவித்திருந்த ஒரு திட்டத்தை ரத்து செய்ததன் மூலம் சட்டவிரோத குடியேறிகளின் பிள்ளைகள் அமெரிக்காவைவிட்டு வெளியேற்றப்படுவர் என்று அஞ்சப்பட்டது. இந்நிலையில் ஜனநாயகக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் இருவருடன் திரு டிரம்ப் உடன்பாடு கண்டுள்ளார்.
இளம் குடியேறிகளைப் பாதுகாக்க ஜனநாயகக் கட்சி- டிரம்ப் உடன்பாடு
1 mins read

